• Jul 25 2025

சீரியல் நடிகை ராஷ்மி ஜெயராஜை நியாபகம் இருக்கா?-அவருடைய குடும்ப புகைப்படம் இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமாக வலம் வரும்  நடிகைகள் பலர் இப்போது எங்கே எப்படி இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. திருமணம், குடும்பம் என ஆன பின்னர் சினிமா பக்கமே வருவதில்லை.

மேலும் அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் ராஷ்மி ஜெயராஜ். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர், ராஜபார்வை போன்ற தொடர்களில் முக்கிய நாயகியாக நடித்திருந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

சீரியலில் நடித்துமுடித்த பின்னர் திருமணம், குழந்தை என செட்டில் ஆகிவிட்டார். சீமந்த புகைப்படம், குழந்தை பிறந்த செய்தியை எல்லாம் அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட்டார்.

எனினும் தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தை Private ஆக்கியுள்ள நிலையில் அவரது புகைப்படங்கள் அவ்வளவாக வெளியாவதில்லை. 

 தற்போது அவர் தனது மகள் மற்றும் கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.






Advertisement

Advertisement