• Jul 25 2025

தமிழ் நாட்டில் No.1 இடத்தைப் பிடித்த டிவி சன்டிவியா? அல்லது விஜய் டிவியா?- வெளியாகிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


ரசிகர்களைக் கவரும் விதமாக ஒவ்வொரு சின்னத்திரை தொலைக்காட்சிகளிலும் பல சீரியல்கள் மற்றுமு் ரியாலிட்ரி ஷோக்கள் என்பன ஒளிபரப்பாகி வருகின்றன.இதனால் பொதுவாக டிவி சேனல்களுக்கு இடையே எப்போதும் போட்டி இருந்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். 

அதனால் அவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.மேலும் வாரம்தோறும் எந்த சேனல் முதலிடம் என புள்ளிவிவரங்களை வெளியாகி வருகிறது. 


இந்நிலையில் விஜய் டிவி தற்போது சன் டிவியை முந்திவிட்டதாக ஒரு போஸ்டர் வெளியிட்டனர். அது சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை மற்றும் புதுச்சேரியில் 15 முதல் 50 வயது உடையவர்களை மட்டுமே அளவுகோளாக வைத்து விஜய் டிவி தங்களை No 1 என அறிவித்து இருக்கின்றனர்.

ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும், அனைத்து வயதினரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் சன் டிவிதான் முதலிடத்தில் இருக்கிறது.இதன் மூலமாக யார் நிஜமான நம்பர் 1 சேனல் என்கிற உண்மை தெரியவந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement