• Jul 25 2025

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி 9வது சீசனோடு முடிவுக்கு வருகிறதா?- ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஏப்ரல் 28, 2006ம் ஆண்டு பாடகி சின்மயி தொகுத்து வழங்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். அன்று தொடங்கிய இந்நிகழ்ச்சியின் பயணம் நேற்று (ஜுன் 26) 9வது சீசன் வரை வந்துள்ளது.

சிறியவர்களுக்கான சீசனும் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. எத்தனை சீசன்கள் வந்தாலும் பார்வையாளர்கள் குறையாமல், TRPக்கு எந்த குறையும் இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

பெரியவர்களுக்கான இந்த 9வது சீசனின் வெற்றியாளராக அருணா அறிவிக்கப்பட்டுள்ளார், இதனை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு செய்தி உலா வருகிறது. அதாவது 9வது சீசனோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியே முடிவுக்கு வர இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

ஆனால் உண்மை என்னவென்றால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தயாரித்து வந்த Media Masons இந்த சீசனோடு விலகுகிறார்களாம். அவர்களுக்கு பதிலாக வேறொரு தயாரிப்பு நிறுவனத்துடன் சூப்பர் சிங்கர் குழு கூட்டணி அமைத்து நடத்துவார்கள் என சொல்லப்படுகிறது..

அநேகமாக Global Villagers சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தயாரிக்கலாம் என்கின்றனர்.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement