• Jul 24 2025

விஜய் ஒரு மனுஷனா..? அசல் கோளாறு ஒரு முழுக் கோளாறு... 'நா ரெடி' பாடலை கிழித்துத் தொங்கவிட்ட அரசியல் பிரபலம்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் 'நா ரெடி' பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி இருந்தது.  இந்த பாடலை தளபதி விஜய், அனிருத் மற்றும் அசல் கோளாறு ஆகியோருடன் இணைந்து  பாடியுள்ளார். இந்தப் பாடலை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற அதே நேரத்தில் இப்பாடல் தொடர்ந்து பல விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது.


அந்தவகையில் தற்போது அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியாவும் விஜய் பாடிய நா ரெடி பாடலுக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கூறி கருது வெளியிட்டுள்ளார். அதாவது அவர் கூறுகையில் "லியோ படத்தின் உடைய பாடல் வரிகள் முழுவதும் மதுவை பற்றியும், புகைப்பிடிக்கிறது பற்றியும், புகைப்பிடித்தால் உங்களுக்கு பவர் கிடைக்குதுனு மட்டும் தான் சொல்றாங்க" என்றார்.

அத்தோடு "மில்லி உள்ள போன கில்லி வெளிய வரும் இந்த மாதிரியான வார்த்தைகள் வரிகள் எல்லாம் அவர் பயன்படுத்தலாமா. விஜய்க்கு ரசிகர்கள் 5 வயதில் இருந்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அவருக்குப் கொஞ்சமாவது சமூகத்தின் மீது அக்கறை இருக்க வேண்டாமா" எனவும் தாறுமாறாக கேள்வி எழுப்பியுள்ளார்.


அதுமட்டுமல்லாது "விரலுக்கு இடையில தீப்பந்தமாம்... இதெல்லாம் ஒரு வரியா, இதை எழுதுன அசல் கோளாறு, ஒரு முழுக் கோளாறான ஆளு. இதுமாதிரியான கீழ்த்தரமான வரிகளை பாட விஜய்க்கு எப்படி மனசு வந்துச்சு. விஜய் ஏற்கனவே சொல்லிருந்தாரு இனிமே சிகிரெட் வாய்ல வச்சுட்டு நடிக்க மாட்டேன்னு, ஆனா சர்க்கார் படத்துல முதல் காட்சியே சிக்ரெட் வச்சுட்டு இருந்தாரு, அதற்கும் நான் எதிர்ப்பு கொடுத்தேன்" என்றார்.

மேலும் "இப்போ இந்தப் பாடல் மூலமா ஒரே ஒரு இளைஞனோ, ஒரு பள்ளி மாணவனோ வீணா போனா அதற்கு யார் பொறுப்பேற்பது. விஜய் பொறுப்பேற்பாரா? மாணவர்களுக்கு விருது கொடுத்து, அவர்களை நேரில் போய்ட்டு சந்தித்தீர்களே, அந்த அரங்கத்தில் இந்த பாடலை உங்களால பதிவிட முடியுமா?

அந்தப் பாடலில் ஏதாவது ஒரு வரி மட்டும் தப்பா இருந்தா பரவாயில்லா, ஆனால் பாடல் முழுக்கவே அப்படி தான் இருக்கிறது. எனக்கு பாட்டில்ல பத்தாது அண்டாவுல கொண்டுவந்து குடுனு சொன்னா, இதை எதிர்க்காமல் எங்களால் எப்படி இருக்க முடியும். இதை சினிமாவாக மட்டுமே பார்க்க முடியாது. இதன்மூலம் ஒருநபர் வீணானாலும் அதற்கு விஜய் தான் காரணம்" என்றார்.


அத்தோடு 'இதுதொடர்பாக நான் வழக்கு தொடரப்போறேன். அந்த பாடல் வரிகளை உடனடியாக நீக்க வேண்டும், அல்லது அந்த பாடலையே படத்தில் இருந்து நீக்க வேண்டும் என பொதுநல வழக்கு தொடர உள்ளேன். பொறுக்கித்தனமான பாட்டு, இதெல்லாம் ஒரு பாடலா? எத பாடுறோம்னு கூட தெரியலேன்னா என்ன மண்ணாங்கட்டிக்கு நீங்க பொதுநலம் குறித்து இந்த மாணவர்களுக்கெல்லாம் விருது கொடுக்குறீங்க" எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் "சமூக சேவை செய்து நீங்கள் மக்களை ஏமாற்றியது போதும். சிகரெட்டை புரமோஷன் பண்ண விஜய் எத்தனை கோடி வாங்குனாருன்னு இந்த இளைஞர்களுக்கு தெரியுமா?" எனவும் கேட்டு அசல் கோளாரையும், விஜய்யையும் தாறுமாறாக கிழித்துத் தொங்கவிட்டுள்ளார் ராஜேஸ்வரி பிரியா.

இவரின் இந்தக் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement