• Jul 24 2025

தல அஜித் இப்படிப்பட்டவரா... தளபதியின் தந்தை ஸ்.எ சந்திரசேகர் கருத்து

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் அவர்களின் தந்தையான ஸ்.எ சந்திரசேகர் அவர்கள் ஒரு நேர்காணல் சந்திப்பில் கலந்து கொண்ட போது நடிகர் அஜித் தொடர்பான ஒரு விடையத்தை பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் அவர்களின் அப்பாவான ஸ்.எ சந்திரசேகர் அவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித் இடையிலான நட்பை பற்றி இவ்வாறு கருத்து தெரிவித்தார். விஜய்யும் அஜித்தும் நல்ல  நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நண்பர்களாக இருந்தாலும் தான் ஜெயிக்கணும்னு என்று இருக்கணும். ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுப்பதில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் நீங்கள் ஒரு இயங்குனராக நடிகர் அஜித்திடம் பேசுவீர்களா? என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு ஒரு 10 ,15 வருடங்களுக்கு முதல் அடிக்கடி மீட் பண்ணுவம். இப்போது சந்திக்க வாய்ப்பு கிடைப்பது இல்லை ஆனாலும் எப்போதுமே பார்த்தால் நல்ல மரியாதை கொடுத்து கதைப்பார் என்றுகூறியுள்ளார். 

மேலும் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது தமிழ் படத்திற்கு ஒரு நடிகர் கிடைத்து விட்டார் என்று ஒரு படம் வைத்தோம். அதற்க்கு பிறகு அவர் அப்படியே வளர்ந்து போய்விட்டார். நான் என்ன செய்தேன் என்றால் என் கேரியரை மறந்து அப்படியே இருந்துவிட்டேன். இடையில் நான் நடித்த நல்ல படம் ட்ராபிக் ராமசாமி அந்த திரைப்படம் ஹிட் ஆகவில்லை ஆனால் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement