• Jul 25 2025

முக்கிய பிரபலம் இல்லாமலேயே எதிர்நீச்சல் சீரியலில் ஏற்படவுள்ள மாற்றம்- திடீர்னு இப்பிடிப் பண்ணீட்டாங்களே...

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.ஆணாதிக்கம் கொண்ட குணசேகரன் வீட்டில் மருமக்களதக சென்றிருக்கும் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி ஆகியோர் அனுபவிக்கும் கஷ்டங்களையே இந்த சீரியல் எடுத்துக் காட்டி வருகின்றது.

ஆண் ஆதிக்கத்தை தாண்டி  இவர்கள் எப்படி வாழ்க்கையில் சாதிக்கிறார்கள் என்பதை மையப்படுத்தியே சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது.ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்து இறப்பிற்கு பிறகு அவரது கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற பெரிய கேள்வி அதிகம் இருந்து வந்தது. 


அதற்கு பதில் அளிக்கும் விதமாக அண்மையில் ஆதி குணசேகரனாக, வேல ராமமூர்த்தி சில எபிசோட் வந்தார்.ஆனால் வந்த உடனே அவர் ஜெயிலுக்கு செல்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆதி குணசேகரன் தான் முக்கிய கதாபாத்திரம், அதனை அடிக்கடி காணாமல் போக வைக்கிறார்கள். 

அவர் இல்லாமல் கதையை விறுவிறுப்பாக செல்ல வைக்க சீரியல் குழு முடிவு எடுத்துவிட்டார்களா என நிறைய கேள்விகள் எழுந்தன.மாரிமுத்துவிற்கு பதில் வேல ராமமூர்த்தி நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வந்தவுடனே அவர் ஒரு பேட்டியில், எனக்கு நிறைய படங்கள் லிஸ்டில் உள்ளது, எனவே சீரியலில் நடிக்க என்னால் கால்ஷீட் ஒதுக்க முடியாது என கூறியிருந்தார்.

இதனால் சில காட்சிகள் அவரை நடிக்க வைத்துவிட்டு அவர் இல்லாமல் சீரியல் எபிசோடுகளை ஓட்டுவார்களா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement