• Jul 25 2025

லியோ படத்தில் இந்த நடிகரும் நடிக்கிறாரா? - அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் அதைவிட மாபெரும் வெற்றியை கொடுக்க வேண்டும் என நினைத்து கடுமையாக உழைத்து வருகிறார் லோகேஷ்.

தொடர்ந்து லியோ படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் கேட்காமலேயே வெளியாகிறது. சமீபத்தில் கூட லியோ திரைப்படத்தில் வேலை செய்த அனைவரையும் பாராட்டும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

காஷ்மீரில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து கவுதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், திரிஷா, கதிர், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், பிக் பாஸ் ஜனனி என பலரும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த பட்டியலில் பகத் பாசிலும் இணைந்துள்ளார். ஆம், லியோ திரைப்படத்தில் பகத் பாசில் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதன்முலம் லியோ திரைப்படமும் கண்டிப்பாக LCU-வில் { lokesh cinematic universe }ல் இணையும் என்று தெரியவந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்தது என்னென்ன சர்ப்ரைஸ் லியோ படத்திலிருந்து நமக்கு காத்திருக்கிறது என்று.


Advertisement

Advertisement