• Jul 24 2025

நடிகை விஜயக்ஷ்மியின் கணவர் வாங்கிய சொகுசு பைக்கின் விலை இத்தனை லட்சமா?- சூப்பராத் தான் இருக்கு

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28, என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான்  விஜயலக்ஷ்மி.,தனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, வெண்ணிலா உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கின்றார்.அவர் பண்டிகை பட புகழ் இயக்குநர் பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 


அவர்களுக்கு தற்போது ஒரு மகனும் இருக்கிறார்.மேலும் இவருக்கு தற்பொழுது படவாய்ப்புக்கள் குறைந்து விட்டதால் டிவி ஷோக்களில் பங்குபற்றி வருகின்றார். அதன்படி பிக்பாஸ், சர்வைவர் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதிலும் ஷு தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் இவர் தேர்வானார்.


அதுமட்டுமின்றி அவரது சொந்த youtube சேனலில் அவரது பர்சனல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது விஜயலக்ஷ்மி அவரது கணவர் பெரோஸ் வாங்கி இருக்கும் சொகுசு பைக்கில் லாங் ரைடு சென்று இருக்கின்றனர். அதன் புகைப்படத்தை அவரே வெளியிட்டு இருக்கிறார்.


விஜயலட்சுமியின் கணவர் வைத்திருக்கும் பைக் தான் பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது. Triumph Rocket என்ற் அதன் விலை சுமார் 23 லட்சம் ருபாய் என்பதும் முக்கியமாகும். மேலும் ஒர்க்கவுட் செய்வதிலும்  விஜயலக்ஷ்மி தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement