• Jul 24 2025

இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் காஜல் அகர்வால்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் தவிர்க்க நடிகையாக வலம் வருபவர் தான் காஜல் அகர்வால்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகின்றார்.அந்த வகையில் தற்பொழுது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.

அண்மையில் திருமணமாகி இவருக்கு குழந்தையும் கிடைத்தது. குழந்தை கிடைத்த பின்னரும்  மார்க்கெட்டை இழக்காமல் இருக்கிறார்.அத்தோடு தொடர்ந்து படவாய்ப்புக்களையும் பெற்று வருகின்றார்.அதிலும் இந்தியன் 2 படத்தின் அப்டேட் நாளுக்கு நாள் வர இப்படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வெளிவர எதிர்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இந்தியன் 2 மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் சமீபத்தில் சொந்தமாக பிசினஸ் கூட துவங்கிவிட்டார்.இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.குழந்தை பெற்ற பின் சற்று உடல் எடை கூடி இருந்த காஜல் தற்போது ஜிம் ஒர்க்கவுட் மூலம் ஸ்லிம்மாக மாறிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement