• Jul 26 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்- அடடே இவருக்கு பதிலாகத் தான் நடிக்கப் போகின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும்  சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.சகோதர பாசத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஓடிக் கொண்டிருக்கின்றது.

எந்த ஒரு ரீமேக்கும் இல்லாமல் தமிழிலேயே தொடங்கப்பட்ட இந்த தொடர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது4 அண்ணன்-தம்பிகள் இவர்களை சுற்றியே கதை வெற்றிகரமாக ஓடுகிறது. இது தவிர தமது சொந்த வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள் கதிர் வீட்டில் தங்கி இருக்கின்றார்கள்.


இது தவிர கதையில்  பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது,வரும் பிரச்சனைகளை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற கேள்வி மக்களிடம் உள்ளது.அத்தோடு எப்போது புது வீடு கட்டப்போகின்றார்கள் என்பதைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.

இந்த தொடரில் பிரசாந்த் என்ற கதாபாத்திரத்தில் வசந்த் என்பவர் நடித்து வந்தார். ஆனால் இப்போது அவருக்கு பதிலாக மகேஷ் சுப்ரமணியன் என்பவர் நடிக்க வருகிறாராம். அத்தோடு வசந்த் எதற்காக சீரியலில் இருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement