• Jul 25 2025

மாமனாரின் பிறந்தநாளிற்கு சூப்பரான பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்த மருமகன்... பின்னிட்டீங்கப்பா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இன்றைய தினம் தனது 73-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதாவது ரஜினியின் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் தனுஷ், ரஜினிக்கு டுவிட்டரின் மூலமாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது ரஜினியின் மருமகனாக இருந்த தனுஷ், கடந்த ஜனவரி மாதம் அவரது மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். 


ஆனால் இருவரும் இதுவரை காலமும் முறைப்படி விவாகரத்து செய்யவில்லை என்று தான் கூறப்படுகிறது. மேலும் விவாகரத்து முடிவை அறிவித்த பின் தற்போது முதன்முறையாக ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து தனுஷ் பதிவிட்டுள்ளமை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


அத்தோடு தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர உள்ளதாக ஒரு தகவல் பரவி வரும் வேளையில், தற்போது தனுஷ், ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். 


அந்தவகையில் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஹாப்பி பர்த்டே தலைவா’ என பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்கு லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement