• Jul 25 2025

சினிமாவை விட்டு ஒதுங்குகிறாரா பால் நடிகை; தொடர்சியான ஆன்மீக பயணம் குறித்து ரசிகர்கள் குழப்பம்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை அமலா பால் கடைசியாக 'தி டீச்சர்' படத்தில் நடித்தார். அதற்கு முன் வெளியான அவரது 'கடாவர்' திரைப்படம் பாராட்டுகளைப் பெற்றது. தனது நடிப்பிற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளையும் பெற்றார் அமலா பால். அதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து, இறுதியில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் படத்தை வெளியிட்டு, ஒருவழியாக தப்பித்தார்.

இந்த நிலையில் நண்பர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக விழுப்புரத்தில் அமலாபால் புகார் அளித்தார். இப்பிரச்னை அவருக்குப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது.இப்படி அடுத்தடுத்து பிரச்னைகள் வந்து போக, மிகவும் மனம் வருந்திப்போன அவர், மன நிம்மதிக்காக கோயில்களுக்கு செல்ல ஆரம்பித்தார்.

குறிப்பாக பழனி மலைக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்த மறுநாளே ரோப்காரில் பயணம் செய்து, முருகனை வழிபட்ட அமலா பால், புதுவித ஆன்மிக பயணத்தை தொடங்கினார். தற்போது இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவிற்கு உள்ள ஆசிரமத்திற்கு அமலா பால் சென்றுள்ளார். அங்கு தங்கி தியானம், வழிபாடு, யோகம், போதனை உள்ளிட்ட பல பயிற்சிகளை அவர் பெறுவதாக கூறப்படுகிறது.


தனது ஆன்மிக பயணம் குறித்த பதிவை இன்ஸ்டாகிராமில் அமலா பால் பதிவு செய்துள்ளதால் இனி அமலாபால் சினிமாவில் நடிப்பாரா என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

எப்போதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது விடுமுறை மற்றும் போட்டோஷூட் படங்களை தவறாமல் பதிவிட்டு வருகிறார்.தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement