• Jul 25 2025

நீங்க நடந்து கொண்ட விதம் சரியா?- ஒவ்வொரு வாரமும் அசீமை வறுத்தெடுக்கும் கமல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் ப்ரோமோ எல்லாம் வழக்கமாக காலையில் வெளியாகும் . ஆனால்  இன்று சனிக்கிழமை என்பதால், அனைத்து ப்ரோமோக்களும் தாமதமாகவே வந்தன.இந்த வாரத்திற்கான பஞ்சாயத்துக்களை பேசுவதற்காக நாயகன் வரான் பேக் ரவுண்ட் மியூசிக்குடன் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் பலவிதமான டாஸ்குகள் நடைபெற்றன. இதையடுத்து, டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட அமுதவாணனுக்கு கோல்டன் டிக்கெட் கிடைத்தது.


இதனால், குறைந்த வாக்குகளை பெற்று இந்த வாரம் வெளியேறுவார் என்று கருதப்பட்ட அமுதவாணன் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு பதிலாக ரச்சிதா தான் வீட்டை விட்டு வெளியேறவுள்ளார். இந்த நிலையில் தற்பொழுது ஒபன் நல்லாத்தான் இருக்கு ஆனா, பினிஷிங் சரி இல்லை என்ற கமெண்டை நான் அசீமுக்கு கொடுத்தேன். அதற்கு அவர் நீ கொடுக்கும் கமெண்டை எல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று முகத்தில் அடித்தது போல் சொன்னார் என்று ஏடிகே கமலிடம் தனது ஆதங்கத்தை கொட்டினார்.


இதற்கு ஆசிம், அந்த கமெண்ட் எனக்கு ஏற்புடையதாக இல்லை அதனால், நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். அப்போது குறுக்கிட்ட கமல் ஏன் அது ஏற்புடையதாக இல்லை, நீங்க நடந்து கொண்ட விதம் சரியா இருந்தது என்று நினைக்கிறீங்களா? என்றும், இதை விக்ரம் மற்றும் ஏடிகேவிடம் சொன்னீங்களா? இதை அவர்களிடம் சொல்லுவதற்கு எது தடுக்கிறது என கமல் அசீமை நிற்கவைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டார். ஆனால் அசீம் பேசாது நின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement