• Jul 24 2025

பொட்டு அம்மன் பட வில்லனை நியாபகம் இருக்கா..? நிஜத்தில் இவ்வளவு ஸ்மார்டா இவர்...தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சாமி படங்கள் என்றாலே பொதுவாக பலரும் விரும்பிப்பார்ப்பார்கள்.அந்தவகையில் சாமி படங்கள் என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது நடிகை ரம்யா கிருஷ்ணன்.

அவர் அதிகப்படியான சாமி படங்களில் அம்மன் வேடம் போட்டு நடித்துள்ளார். அவருக்கு பின்னர் நடிகை ரோஜா, மீனா, பானுப்ரியா போன்ற நடிகைகளும் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார்கள்.

இப்போது உள்ள நாயகிகளும் சாமி வேடம் போட்டு நடிக்கிறார்கள், ஆனால் ரம்யா கிருஷ்ணன் அளவிற்கு இல்லை என்பதே ரசிகர்கள் பலரின் கருத்தக உள்ளது.

அப்படி சினிமா ரசிகர்களிடம் பிரபலமான சாமி படங்களில் ஒன்று  தான் பொட்டு அம்மன்.

ரோஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த பொட்டு அம்மன் படத்தில் ஒரு கொடூரமான வில்லன் ஒருவர் வருவார், இப்போது அந்த முகத்தை பார்த்தாலும் பயம் வரும். பொட்டு அம்மன் படத்தில் வில்லனாக நடித்தவர் பெயர் சுரேஷ் பாலா.



மலையாள சினிமாவில் பிரபல நடிகரான இவர் சில படங்களை தயாரித்தும் உள்ளாராம்.


தற்போது அவரின் நிஜ புகைப்படம் வெளியாகி உள்ளது.அதைப்பார்த்து விட்டு அவரா..இவர் என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.



Advertisement

Advertisement