• Jul 25 2025

சிவகார்த்திகேயனின் குல்லாக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா..! இத எதிர்பார்க்கலயே..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து சில வருடங்களிலேயே தனது மாறுபட்ட நடிப்பினால் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர்தான் சிவகார்த்திகேயன்.


இந்நிலையில் இவர் நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜனி முருகன் போன்ற நகைச்சுவை கலந்த திரைப்படங்கள் இன்று வரை அனைவரரையும் கவர்ந்த திரைப்படங்களுள் ஒன்றாக காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். 

இப்படம் வரும் 14ஆம் தேதி திரைக்கு வரை இருக்கிறது. இதனால் படக்குழுவுடன் இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பல இடங்களில் கலந்துகொண்டு வருகிறார். 


இவ்வாறானதொரு நிலையில்  அவர் எங்கு சென்றாலும் தலையில் குலாவுடன் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பலவிதமான கேள்விகள் எழுந்து வருகிறது.

சமீபத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் எப்போதும் குல்லாவுடன் சுற்றுவதற்கான காரணத்தையும் இதன் போது வெளிப்படுத்தியிருந்தார்.


அதாவது, தனது அடுத்த படமான ளுமு 21 படத்திற்கான கெட்டப்பில் இருப்பதாகவும், அதை வெளியில் காட்ட கூடாது என படக்குழு கண்டிஷன் போட்டதால் தான் எப்போதும் குல்லாவுடன் இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். 

அதேவேளை எவ்வளவு வெயில் அடித்தாலும் அதனுடன் தான் சுத்த வேண்டியதாக உள்ளது என்று நகைச்சுவையுடனும் கூறி இருக்கிறார். இதனால் அவரது ஹேர் ஸ்டைலை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.


Advertisement

Advertisement