• Jul 25 2025

கமலுக்கும் விஜய்க்கும் இடையில் இப்படியொரு பிரச்சினை இருக்கா?- அட்லியால் நடந்த சம்பவம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


அட்லி இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் மெர்சல். அப்பாவை வில்லன் கொன்றுவிட, இரண்டு குழந்தைகள் வெவ்வேறு இடத்திற்கு பிரிந்துவிடுவார்கள். இதில், மேஜிக் நிபுணராக இருக்கும் விஜய் மட்டும் வில்லன்களை பழி வாங்கி கொண்டே வருவார். இறுதியில் இரண்டு விஜய்களும் இணைந்து வில்லனை பழிவாங்குவார்கள்.

மெர்சல் படத்தில் விஜய் மேஜிக் நிபுணர் எனில், அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள அப்பு சர்க்கஸில் வேலை செய்பவராக வருவார். அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி அப்படத்தின் கதை அப்படியே மெர்சல் படத்தில் இருக்கும். மெர்சல் படம் வெளியான போது அபூர்வ சகோதரர்கள் படத்தை சுட்டுத்தான் அட்லி இப்படத்தை எடுத்துள்ளார் என பலரும் சமூகவலைத்தளங்களில் கூறினர்.


தற்போது விஜய் விசயத்திற்கு வருவோம். விக்ரம் பட முடிந்ததும் அடுத்து விஜய்யை வைத்து நீங்கள் இயக்கும் படத்தை நானே தயாரிக்கிறேன் என லோகேஷ் கனகராஜிடம் கமல் கூறினார். இதை லோகேஷும் விஜயிடம் தெரிவித்தார். ஆனால், விஜய்க்கு அதில் விருப்பமில்லை. கமலும் அதை புரிந்துகொண்டு விட்டுவிட்டார். அந்த படம்தான் லியோ-வாக தற்போது உருவாகி வருகிறது.

கமல் தயாரிப்பில் நடிக்க விஜய்க்கு ஏன் விரும்பவில்லை என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. அதாவது, மெர்சல் படம் வெளியானதும் அட்லி மற்றும் விஜய்யை தனது அலுவலகத்திற்கு அழைத்த கமல் பின்னால் அபூர்வ சகோதரர்கள் போஸ்டரை வைத்து அவர்களுடன் ஒரு படம் எடுத்துக்கொண்டுஅனுப்பி விட்டார். அதாவது, என் படத்தைத்தான் நீங்கள் காப்பி எடுத்து படம் எடுத்திருக்கிறீர்கள் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார். இந்த புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதை மனதில் வைத்துதான் கமல் தயாரிப்பில் நடிக்க விஜய் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.


வெற்றி பெற்ற பழைய திரைப்படங்களின் கதையை சுட்டு படம் எடுக்கும் அட்லி விஜய்யின் குட் புக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement