• Jul 25 2025

அடடே நடிகை ஜோதிகாவா இது?-நியூ லுக்கில் 20 வயசு பெண் போல செமையாக இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களின் காலம் தொடக்கம் தற்பொழுது வரை தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி நடித்து வரும் நடிகை தான் ஜோதிகா.பொதுவாக நடிகைகள் திருமணம் ஆகி குழந்தை பெற்று கொண்டால் சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையிலே தான் அதிக கவனம் செலுத்தி வருவார்கள்.

ஆனால் திருமணம் ஆகி குழந்தை பெற்று கொண்ட பின்னர், வலுவான கதைக்களத்தில் கம் - பேக் கொடுத்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றவர் ஜோதிகா.ஜோதிகா முன்னணி நடிகையாக இருந்த போது... டாப் லிஸ்டில் இருந்த நடிகை மீனா, சிம்ரன், சோனியா அகர்வால், சினேகா, போன்ற நடிகைகள் தற்போது வரை திரையுலகில் நடித்து வந்தாலும்... ஜோதிகா அளவிற்கு அவர்களால் கதையின் நாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கமுடியவில்லை.


ஜோதிகா கடைசியாக அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'உடன்பிறப்பே' படத்தில் நடித்த நிலையில், தற்போது மலையாளத்தில் மம்மூடிக்கு ஜோடியாக காதல் தி கோர் என்கிற படத்திலும் ஹிந்தியில் ஸ்ரீ என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.


திரைப்படங்கள் நடிப்பதை தாண்டி சில படங்களை கணவர் சூர்யாவுடன் சேர்ந்து தயாரித்தும் வருகிறார் ஜோதிகா. இந்நிலையில் ஜோதிகா, புத்தம் புதிய ஹேர் ஸ்டைலில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர், உண்மையில் இது ஜோதிகாவா... அல்ல அவருடைய மகளா என்று கூட கேள்வி எழுப்பி வருகிறார்கள். காரணம் இந்த புகைப்படத்தில் மிகவும் யங்காக காணப்படுகிறார் ஜோ. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது. 



Advertisement

Advertisement