• Jul 24 2025

பதான் படத்தை பிடிக்கவில்லை என மழழை மொழியில் சொன்ன சிறுமி- நடிகர் ஷாருக்கானின் கலகல பதில்..!

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் ஷாருக் கான். கடந்த சில வருடங்களாக நடிப்பு உலகில் இருந்து விலகி இருந்த இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் பதான்.இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

 மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் 'பதான்' இப்படத்தை இயக்கி இருந்தார்.பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகியது. 


படம் வெளியாகி முதல் 5 நாளில்  543 கோடி ரூபாய்களை இந்த படம் வசூல் செய்து இந்திய அளவில் சாதனையை படைத்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. உலகளவில் தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.இந்நிலையில் நேற்று நடிகர் ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். 

அப்போது அபிஷேக் குமார் என்பவர் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில் ஒரு சிறுமியிடம் "என்ன படம் பார்த்தாய்" என அருகில் இருப்பவர் கேட்க, "பதான்" என அந்த சிறுமி பதில் அளிக்கிறார். "படம் பிடித்திருந்ததா?" என அவர் மேலும் கேட்க, "இல்லை" என மழலை மொழியில் சிறுமி சொல்கிறார்.


இந்நிலையில் இதுகுறித்து ஷாருக்கான் செய்த கமெண்டில்,"ஓ.. நான் இப்போது கடினமாக உழைக்க வேண்டும். இளம் ரசிகர்களை ஏமாற்றமடைய விடக்கூடாது. இது நாட்டின் இளைய சமுதாயம் குறித்த விஷயம்" என குறிப்பிட்டு ஒருவேளை அந்த சிறுமி ரொமான்டிக் ரக படங்களை விரும்புவார் என நினைப்பதாகவும் அவருக்கு தன்னுடைய தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தினை பரிந்துரைப்பதாகவும் ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த கமெண்ட் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.



Advertisement

Advertisement