• Jul 26 2025

பிக்பாஸ் சனம் ஷெட்டியா இது?- நமிதாவை விட மோசமாக உடல் எடையைக் கூட்டி வித்தியாசமாக மாறிவிட்டாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு கொண்டு ரசிகர்களிடையே பிரபல்யமானவர் தான் சனம் ஷெட்டி.இதற்கு முதல் இவர் பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்குபற்றிய தர்ஷனுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.


இருப்பினும் அவருடனான காதலை முறித்துவிட்டு தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த ஷோ மூலமாக அவருக்கு நல்ல பாப்புலாரிட்டி கிடைத்தது. இதனால் பல விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.


இந்த நிலையில் தற்பொழுது படவாய்ப்புப் பெற்று நடித்து வருகின்றார்.அந்த வகையில் இவரது நடிப்பில் எதிர்வினையாற்று என்ற படம் உருவாகி வருகின்றது.அதில் அவர் புதுமுகத்திற்கு ஜோடியாக நடிக்கிறார்.

சமீபத்தில் சனம் ஷெட்டி குந்தவை த்ரிஷா போன்ற கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தி இருந்தார். அது இணையத்தில் வைரல் ஆகி நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.


இந்நிலையில் சனம் ஷெட்டி தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் ஒன்றை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.அதில் அவர் குண்டாக மாறி இருப்பது தெரிகிறது என நெட்டிசன்கள் கமெண்டில் தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.. 



Advertisement

Advertisement