• Jul 26 2025

கோலாகலமாக நடந்த 'பொன்னியின் செல்வன் வெற்றி விழா- ஸ்டைலிஷாக வந்த கார்த்தி மற்றும் ஜெயம் ரவி

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படமாக உருவான இப்படமானது இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது.சுமார் 3 ஆண்டுகள் கடின உழைப்பிற்கு பின்னர் இப்படம் எடுக்கப்பட்டது.


2000-யிரம் பக்கங்களை கொண்ட ஒரு கதையை படமாக எடுப்பது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம், அதனை மிகவும் நேர்த்தியாக மணிரத்தினம் செய்துள்ளார் என பாசிட்டிவ் விமர்சனங்களும் எழுந்தது.அத்தோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.


மேலும் இயக்குனர் மணிரத்னம், இந்த படத்திற்காக தேர்வு செய்துள்ள அனைத்து கதாபாத்திரங்களுமே கதைக்கும், கேரக்டருக்கும் பொருத்தமாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்தது. தற்பொழுது படம் வெளியாகி  ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், இன்று இந்த படத்தின் சக்ஸஸ் மீட் மற்றும் தேங்க்ஸ் மீட் பிரமாண்டமாக நடந்துள்ளது. 


இதில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம், ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிக்கையாளர்கள் போன்ற பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை, படக்குழு ஏப்ரல் மாதம் வெளியிட தயாராகி வருவதாகவும், இந்த படத்தின் பணிகள் துரிதமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement