• Jul 25 2025

குக்வித் கோமாளியில் இருந்து விலக இந்த ஷுட்டிங் தான் காரணமா?- மணிமேகலை கொடுத்த அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவி தொலைக்காட்சியில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு நிகராக டி.ஆர்.பி-யில் கெத்து காட்டி வரும் ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி எனலாம். வாரம்  இரண்டு நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 

இந்தியாவை தாண்டி வெளிநாட்டிலும் இந்த நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 4 வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.ஒரே ஒரு போட்டியாளர் தான் இதுவரை எலிமினேட் ஆகி இருக்கிறார்


இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், கடந்த மூன்று சீசன்களிலும் காமெடியில் கலக்கி வரும், மணிமேகலை திடீர் என இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டார்.


அவர் நிகழ்ச்சியை வெளியேறியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.இதனால் இவர் கர்ப்பமாக இருக்கின்றாரோ எனப் பலவிதமாக செய்திகள் உலா வருகின்றது. அத்தோடு CWCஷோவை தயாரிக்கும் நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதலால் தான் இந்த முடிவை எடுத்தாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.


அது மட்டுமின்றி இன்று மணிமேகலை புது ஷூட்டிங் ஒன்றில் இருக்கம் போட்டோவை வெளியிட்டுத் இருக்கிறார்.அது என்ன ஷூட்டிங் என்கிற விவரங்களை அவர் குறிப்பிடவில்லை. அதனால் இந்த ஷூட்டிங்கிற்காக தான் குக் வித் கோமாளியை அவர் உதறினாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement