• Jul 26 2025

பிரபாஸூக்கு ஜோடியாக களமிறங்கும் நடிகை இவரா? சமந்தாவையே அழகில் மிஞ்சீடுவார் போல

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

 2019 இல் 'கிஸ்' என்கிற கன்னடமொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, மேலும், சிறந்த பெண் நடிகைக்கான விருதை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளையும் வென்றுள்ள ஹீரோயின் தான் ஸ்ரீ லீலா . இவருடனே பிரபாஸ் அடுத்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து முடித்துள்ள 'சலார்' படம் விரைவில் திரைக்கு வருகிறது.  பிரபாஸ் நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898 ஏடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து சீதா ராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என ஏற்கனவே தகவல் வெளியானது. இப்போது இந்த படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஸ்ரீ லீலா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. 

இப்படம்  உலகப்போர் பின்னனியில் நடக்கும் காதல் கதையை மையப்படுத்தி உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.



Advertisement

Advertisement