• Jul 26 2025

பாக்கியா கெஞ்சியும் ராதிகா செய்த காரியம்- அதிர்ச்சியில் உறைந்த மொத்தக் குடும்பம்- ஆறுதல்ப்படுத்திய பழனிச்சாமி- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கான்டீன் ஆடரை ராதிகா ஹான்சல் பண்ணியதால் பாக்கியா அவரிடம் போய் கெஞ்சிக் கொண்டு இருக்கின்றார். இருந்தாலும் ராதிகா இப்போ ஆபிஸ் மொத்தமும் என்னோட கன்ரோலில் தான் இருக்கு நான் சொல்லுறதை தான் எல்லோரும் செய்வாங்க என்று சொல்கின்றார்.இருந்தாலும் பாக்கியா கெஞ்சிக் கொண்டே இருக்கின்றார்.


தொடர்ந்து அமிர்தாவின் அம்மா போன் பண்ணி அமிர்தாவிடம் போன் பண்ணி பேசுகின்றார். அத்தோடு உன்னோட மாமியார் பேசினவங்களா என்று கேட்க, அமிர்தா ஏதாவது பிரச்சினையா என்று கேட்க இல்லை சும்மா கேட்டேன் என்று சொல்ல அமிர்தா அவங்கள போய் பார்க்கனும் என்று சொல்ல அவரது அம்மா, அதெல்லாம் வேணாம் அவங்களே அவங்களை பார்த்துப்பாங்க நீ யோசிக்காமல் இரு என்கின்றார்.

தொடர்ந்து பழனிச்சாமியின் அம்மா பாக்கியாவை வரச் சொன்னதால் பாக்கியா வருகின்றார். பழனியும் அவரது அம்மாவும் சிரித்து பேச பாக்கியா சோகமாக இருப்பதைப் பார்த்து என்னாச்சு என்று கேட்கின்றார். அப்போது பாக்கியா கான்டீன் கைவிட்டுப் போகப்போகும் விஷயத்தைச் சொல்கின்றார். இதைக் கேட்ட பழனிச்சாமி அதிர்ச்சியடைந்தாலும் பின்னர் பாக்கியாவை ஆறுதல்ப்படுத்துகின்றார்.


மேலும் இரவு வீட்டுக்கு வந்ததும் பாக்கியா எல்லோருக்கும் சொல்ல எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர்.அத்தோடு நாளைக்கு நடக்கப்போற வோட்டிங்ல தான் தெரியும். வோட்டிங் குறைவாக வந்திடுச்சுனா என் ஆடரை ஹான்சல் பண்ணிருவாங்க என்று சொல்கின்றார்.அப்போது ராமமூர்த்தி ஈஸ்வரி எழில் எல்லோரும் ஆறுதல்ப்படுத்துகின்றனர்.


அத்தோடு ராதிகாவுக்கு இரக்கம் பார்க்கக் கூடாது. அவ எப்பிடிப் பண்ணிட்டா பார்த்தியா எல்லாம் உன்னை சொல்லனும் பாக்கியா என்று ஈஸ்வரி ராதிகாவைத் திட்டுகின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement