• Jul 26 2025

காமெடி நடிகர் கஞ்சா கருப்புக்கு இப்படியொரு நிலையா..? கடைசியில் இப்படி ஆகிடுச்சே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் சிறு வேடத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் நடிகர் கஞ்சா கருப்பு. 

அதன்பின்னர் சுப்ரமணியபுரத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து மக்கள் மனதில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார்.


விக்ரம், சூர்யா, விஜய், ஜீவா, தனுஷ், விஷால், சசிக்குமார், அருண் விஜய் என  பல முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு  நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள கஞ்சா கறுப்பு 2010ம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


அத்தோடு 2014ம் ஆண்டு முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார். சினிமாவில் சம்பாதித்த பணம் அனைத்தையும் போட்டு இப்படத்தை தயாரிக்க படம் சரியான வசூலை பெறவில்லை, தோல்வியில் முடிந்தது.


இதனால் சொந்த வீடு, கையில் இருந்த பணம் அனைத்தையும் இழந்து இப்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறாராம் கஞ்சா கறுப்பு. அவ்வப்போது கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறாராம்.





Advertisement

Advertisement