• Jul 26 2025

துனீஷாவின் மரணத்திற்குக் காரணம் இதுதான்... காதலனின் வாயால் வெளிவந்த உண்மை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சீரியல்களின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை துனீஷா. இவர் முதன்முதலில் பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப் என்ற தொடரில் நடிக்க தொடங்கினார். அதுமட்டுமல்லாது 'இஷ்க் சுபான் அல்லா, கப்பார் பூஞ்ச்வாலா, ஷேர்-இ-பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங்' மற்றும் 'சக்ரவர்த்தி அசோகா சாம்ராட்' உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்துள்ளார்.


சீரியல்களில் மட்டுமல்லாது இந்தி திரைப்படங்களான 'பிதூர், பார் பார் தேகோ, கஹானி 2 துர்கா ராணி சிங்' மற்றும் 'தபாங் 3' ஆகியவற்றிலும் நடித்துள்ளார். இவ்வாறாக திரையுலகில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த 20 வயதான இவர் மராட்டியத்தில் அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். அத்தோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சக நடிகரான ஷஷென் முகமது கானை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட துனீஷா சர்மாவும், அவருடன் வெப் தொடரில் நடித்து வந்த நடிகர் முகமது கானும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. 


விசாரணையின் போது பல அதிர்ச்சியான தகவல்களை ஷீஷன் கான் வெளியிட்டுள்ளார். ஷஷென் கான் தனக்கும் துனீஷா சர்மாவுக்கும் இடையிலான உறவையும் முறிவையும் வெளிப்படுத்தியுள்ளார். வெவ்வேறு மதம் மற்றும் வயது வித்தியாசம் காரணமாக இருவரும் பிரிந்ததாக தெரிவித்தார். அதாவது தனக்கு 28 வயது என்றும், துனீஷாவுக்கு 20 வயது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் துனீஷா ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றதாகவும் அப்போது அவரை தடுத்து நிறுத்தியதாகவும் ஷஷென் கூறினார். இது தொடர்பாக நடிகையின் தாயார் வனிதா சர்மாவுக்குத் தகவல் தெரிவித்ததாகவும் கூறி உள்ளார். இதுமட்டுமல்லாமல், ஷ்ரத்தா மற்றும் அப்தாப் வழக்கிற்கு பிறகுதான் அவர்கள் இந்த உறவை முடித்துக் கொண்டனர் என ஷஷென் போலீசாரிடம் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement