• Jul 24 2025

லத்தி படத்தால் விஷாலுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை- இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் விஷால்.இவர் படங்களில் நடிக்க வருகிறாரோ ,இல்லையோ கதையை கேட்டவுடன் அட்வான்ஸ் பணத்தை வாங்கி விடுவார். மேலும் டப்பிங் கொடுப்பதற்கு முன்பாகவே படத்தில் நடித்த மொத்த பணத்தையும் வாங்கிக் கொண்டு தான் டப்பிங் வேலையே செய்வார்.

அந்த அளவிற்கு தனக்கு வர வேண்டிய பணத்தின் மீது விஷால் காராக நடந்துக்கொள்வார்.ஆனால் அடுத்தவர் பணம் என்று வரும்போது, அதை விஷால் பெரிதாக பொருட்படுத்தமாட்டார் என்ற கருத்தும் உண்டு. உதாரணமாக கடந்தாண்டு லைகா நிறுவனம் தயாரிப்பில் விஷால் புது படத்தில் நடிக்க கமிட்டானார். அதற்கான அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கொண்ட விஷால், படப்பிடிப்புக்கு வருமாறு அழைத்தபோது வராமல் தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் அலைக்கழித்தார்.


இதனால் காண்டானா லைகா நிறுவனம், அட்வான்ஸ் பணத்தை திருப்பிக்கேட்ட போது அதையும் விஷால் செய்யாமல் இருந்தார். அதற்குப்பின் லைகா நிறுவனம் கோர்ட்டில் விஷால் மீது வழக்கு பதிந்த நிலையில், பெரும் பிரச்சனையில் மாற்றிக்கொண்டார். பணம் தற்போது தன்னிடம் இல்லை என்றும், வந்தவுடன் திருப்பி தருவதாகவும் கூறிக்கொண்டு தற்போது வரை பணத்தை கொடுக்காமல் தான் உள்ளார் .

தற்போது லைகா நிறுவனம் தான் விஷாலுக்கு பணத்தை கொடுத்து விட்டு மாட்டிக்கொண்டு வருகிறது. தற்போது இதே நிலை தான் விஷாலின் வாழ்க்கையிலும் தற்போது நடந்துள்ளது. கடந்தாண்டு விஷால் நடிப்பில் பேன் இந்தியா படமாக ரிலீசான லத்தி படத்தை இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கினார். விஷாலின் நண்பர்களான ரமணா மற்றும் நந்தாவின் ராணா தயரிப்பு நிறுவனம் மூலமாக இப்படத்தை தயாரித்த நிலையில் படம் படுதோல்வியடைந்தது.


இந்த படத்தில் நடிக்க விஷால் நண்பர்களுக்காக பாதி சம்பளமே வாங்காமல் நடித்துக்கொடுத்துள்ளார். தற்போது படம் ரிலீஸாகி 2 மாதங்கள் ஆன போது ரமணா மற்றும் நந்தா விஷாலுக்கு சம்பளம் கொடுக்காமல் உள்ளதால், தற்போது இவர்கள் மூவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement