• Jul 25 2025

வாழ்க்கையின் அர்த்தத்தை எங்களுக்குக் கற்றுக் கொடுத்தாய்-அன்பு மகளை முத்தமிட்டு வாழ்த்திய சினேகா!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது சிரிப்பழகால் ரசிகர்களை வளைத்துப்போட்டவர் நடிகை சினேகா. இவர் அஜித் விஜய் கமல் தனுஷ் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர். தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகின்றார்.


இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. 


அதன்பிறகு ஆத்யந்தா என்ற மகள் பிறந்தாள் இந்நிலையில் மகளின் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நடிகை ஸ்னேகா அவருடன் எடுத்துக்கொண்ட கியூட்டாக போட்டோக்களை வெளியிட்டு,  என் சன் ஷைன்! நீ என் இதயத்தை நிரப்புகிறாய், நீ என் உலகத்தை நிரப்புகிறாய், நீ என் ஆன்மாவை நிரப்புகிறாய். நீங்கள் என் மீது பொழியும் அன்பு பிரபஞ்சத்தில் மிக அழகான விஷயம்.


 எப்போதும் ஒரே குறும்பு, அக்கறை, அன்புடன் இருங்கள்.வாழ்க்கையின் அர்த்தத்தை எங்களுக்குக் கற்றுக் கொடுத்தாய்! நிலவுக்கும் பின்னுக்கும் உன்னை நேசிக்கிறேன். என கூறி வாழ்த்தியுள்ளார். இதனால ரசிகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement