• Jul 25 2025

நடிகர் ஆர்யாவின் மகளா இது?- அதுக்துள்ள இவ்வளவு கியூட்டாக வளர்ந்திட்டாங்களே- சாயிஷா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்ற 'வனமகன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமான நடிகை சாயிஷாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.


ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும், 'கஜினிகாந்த்' படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த போது, இருவருக்கும் இடையே உருவான நட்பு பின்னர் காதலாக மாறியது.இரு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்த பின்னர், இவர்களின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக ஹைதராபாத்தில் இவர்கள் திருமணம் நடந்தது. 


திருமணத்திற்கு பின்னர் சாயிஷா ஆர்யாவுடன் சேர்ந்து 'டெடி' மற்றும் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடிப்பில் கமிட்டான படத்தில் மட்டுமே நடித்த நிலையில், பின்னர் ஒரேடியாக திரையுலகை விட்டு விலகினார். பின்னர் சாயிஷா அண்மையில் வெளியாகிய பத்துதல படத்தில் ராவடி என்னும் பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியிருந்தார்.


இந்த நிலையில் தனது மகளுடன் சேர்ந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அடடே அதுக்குள்ள வளர்ந்திட்டாங்களே எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







Advertisement

Advertisement