• Jul 24 2025

வாடிய முகத்துடன் விமான நிலையம் வந்த அஜித்.. லக்கேஜ்ஜை கைப்பற்றிய ரசிகர்.. நடந்தது என்ன..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இத்தனை நாட்களாக தந்தை இறந்த துக்கத்தில் இருந்த நடிகர் அஜித் தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றார். அந்தவகையில் இன்றைய தினம் வெளியூர் பயணத்திற்காக சென்னை விமானநிலையத்திற்கு வந்துள்ளார். 


இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதில் ஸ்மார்ட்டான லுக்கில் அஜித் காணப்பட்ட நிலையிலும், அவரது முகத்தில் சற்று வாட்டம் காணப்படுவதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். 


இந்நிலையில் அஜித் மிகப்பெரிய லக்கேஜ் ஒன்றை வைத்திருந்தார். அந்த லக்கேஜை ரசிகர் ஒருவர் கைப்பற்றி அவருக்கு உதவ செய்ய முற்பட்டிருக்கின்றார். ஆனால் அஜித்தை அதை நாசுக்காக மறுத்தார். அதாவது தன்னுடைய லக்கேஜை தானே சுமப்பதுதான் முறை என்பதை அவர் அந்த ரசிகருக்கு உணர்த்தி கூறியுள்ளார்.


இந்த சம்பவத்தின் மூலமாகவும் அஜித் எப்போதுமே தன்னுடைய கொள்கைகளை மிகவும் சிறப்பாக மெயின்டெயின் செய்து வருபவர் என்பதை பலருக்கும் புரியவைத்துள்ளார்.

Advertisement

Advertisement