• Jul 25 2025

நடிகர் கார்த்தியின் மகளா இது?- அதுக்குள்ள இவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்திட்டாரே....

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிப்பு மீது கொண்ட ஆர்வம் காரணமாக நடிப்பு துறையையே தேர்வு செய்தார் கார்த்தி. சினிமாவில், சூர்யாவை விட கார்த்திக்கு அதிஷ்டம் அதிகம் என்று தான் கூற வேண்டும். காரணம் சூர்யா சினிமாவில் அறிமுகமாகி, தன்னை நிலைநிறுத்தி கொள்ள பல வருடங்கள் போராடினார். ஆனால் கார்த்தி தன்னுடைய முதல்படமான  பருத்திவீரன் படத்திலேயே எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

பருத்திவீரனில் துவங்கி கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' வரை, கடுமையான உழைப்பால் மட்டுமே இந்த இடத்தை அவரால் எட்ட முடிந்தது. இதுவரை வெளியான படங்களை காட்டிலும், 'பொன்னியின் செல்வன்' படம் கார்த்திக்கு மிகவும் ஸ்பெஷல் என்றே கூறலாம்.


நடிப்பில் ஒருபக்கம் கவனம் செலுத்தி வந்தாலும், சமூக அக்கறை மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவும் மறப்பதில்லை. சூர்யாவுக்கு ஃபாரின் ட்ரிப் பிடிக்கும் என்றால், கார்த்திக்கு கிராமத்து வாழ்க்கை என்றால் அவ்வளவு பிரியம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய கிராமத்திற்கு சென்று வயல், காடு  போன்றவற்றை பார்த்துவிட்டு வருவார்.

அதே போல் ஊரில் திருவிழா என்றால், சத்தமில்லாமல் குடும்பத்துடன் கலந்து கொண்டு களைகட்ட செய்து விடுவார். அப்படி தான் இவருடைய சொந்த ஊரில், கோவிலுக்கு முளைப்பாரி எடுத்து வேண்டுதல் செய்த போது, கார்த்தி தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்ட அரிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.


கார்த்தி தன்னுடைய மகள் உமையாளுடன் திருவிழாவின் போது எடுத்து கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.  சிறு குழந்தையாக பார்த்தவர் தற்போது வளர்ந்து செம்ம கியூட்டாக இருக்கிறார். என இந்த போட்டோவை பார்த்து கார்த்தியின் ரசிகர்கள்...  ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.



Advertisement

Advertisement