• Jul 24 2025

'லால் சலாம்' பட மொய்தீன் பாய் சிலையை வடிவமைத்த மட்பாண்ட கலைஞர்..! குவியும் வாழ்த்துக்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூளவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 27). மண்பாண்ட கலைஞரான இவர் மண் பாண்டங்கள் மட்டுமல்லாமல் சிலைகள் மற்றும் கால்நடைகள் என அனைத்து விதமான உருவ பொம்மைகளையும் செய்து வருகிறார். 

தீவிர ரஜினி ரசிகரான இவர் தனது பெயரையே ரஜினி ரஞ்சித் என மாற்றிக் கொண்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ரஜினியின் உருவ பொம்மை சிலை செய்த இவர் அதனை ரஜினியிடம் நேரில் கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளார்.

தற்போது ரஜினி மகள் ஐஸ்வர்யா தயாரிக்கும் 'லால் சலாம்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 'லால் சலாம்' படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். 

இந்தநிலையில் மொய்தீன் பாய் சிலையை 2 அடி உயரத்தில் ஒரு மணி நேரத்தில் ரஞ்சித் செய்து முடித்துள்ளார். அந்த சிலையை ரஜினியை நேரில் சந்தித்து கொடுக்க உள்ளதாக ரஞ்ஜித் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement