• Jul 25 2025

90களில் கலக்கிய நடிகை சங்கவியின் மகளா இவர்?- வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை சங்கவி. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அமராவதி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.

4 அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் மட்டுமே ரசிகன், கோயமுத்தூர் மாப்பிள்ளை என 4 படங்கள் நடித்தார்.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொத்தம் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் சரத்குமார், கார்த்திக், பிரபு, விஜய், அஜித், ராம்கி, பிரசாந்த் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்திருக்கிறார்.



அதேபோல் சின்னத்திரையிலும் கோகுலத்தில் சீதை, சாவித்திரி, காலபைரவன் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

அத்தோடு 2016ம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை சங்கவி திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.

2020ம் ஆண்டு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது, சங்கவி அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.



Advertisement

Advertisement