• Jul 26 2025

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் பேத்தியா இது..? தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் அந்த காலத்து படங்களில் நடித்து பிரபலமான நடிகைகள் சிலரை நம்மால் மறக்கவே முடியாது. அப்படிபட்ட நடிகைகளில் ஒருவர் தான் சௌகார் ஜானகி.

1950ம் ஆண்டில் இருந்து நடித்து வரும் இவர் பிஸ்கோத் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். அத்தோடு கடந்த ஆண்டு கூட இவரது கலை சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

சௌகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவி அரவிந்த் தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

 பாலசந்தர் அவர்கள் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதாக பேசப்பட்டது.

அத்தோடு 1996ம் ஆண்டு அரவிந்த் கமலநாதன் என்பவரை திருமணம் செய்த இவருக்கு அதிதி மற்றும் மேகனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் தனது சமூக வலைதளத்தில் மகள்களுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்ய வைரலாகிறது.



Advertisement

Advertisement