• Jul 25 2025

கொஞ்சம் லேட் தான் ஆனால் ட்ரெண்டிங் பாட்டு- மனைவியுடன் ரொமான்ஸ் பண்ணும் ஜீவா- வைரலாகும் கியூட்டான வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக விறுவிறுப்பிறகு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதுவரை ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் தற்பொழுது பூகம்பம் கிளம்பியுள்ளது.

ஜீவா தன்னுடைய குடும்பம் தன்னை அவமானப்படுத்துவதாக நினைத்து குடும்பத்தாருடன் சண்டை பிடித்து விட்டு தன்னுடைய மாமனார் வீட்டிலேயே தங்கி விட்டார்.ஜுவா குடும்பத்தை விட்டு பிரிந்ததை எண்ணி கவலையில் இருக்கும் குடும்பத்திற்கு புதிதாக ஐஸ்வர்யாவினால் புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது.


அதிலும் ஐஸ்வர்யா வீட்டை விட்டு கிளம்பி விட்டார். இவருடன் கண்ணனும் கிளம்பி விட்டால் என்ன நடக்கும். முல்லையையும் அவரது அம்மா கூட்டிட்டு போனால் மூர்த்தியும் தனதும் தனித்து போய் விடுவார்களா என்ற கேள்வி ரசிகர்களிடம் அதிகமாக இருந்து வருகின்றது.


மேலும் இப்படியான நிலையில் ஜீவா எனப்படும் வெங்கட் அண்மையில் தன்னுடைய மகளின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடியிருந்தார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இதனை அடுத்து தற்பொழுது தன்னுடைய மகளுடன் இணைந்து மாலை டும்டும்.... பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரிந்ததற“குப“ பிறகு தான் ரொம்ப ஹப்பியாக இருக்கிறீங்க போல எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement