• Sep 09 2025

நயன்தாரா-விக்னேஷ் சிவன் போயஸ் கார்டனில் கட்டி வரும் வீடு இது தானா?- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். நானும் ரௌடி தான் என்னும் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் நண்பர்களாக அறிமுகமாகிய இவர்கள் பின்னர் காதலித்து இந்த ஆண்டு பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வாடகைத் தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றனர்.

சமூக வலைத்தளங்களில் ஆர்வம் மிக்க விக்கி தன் குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை பதிவிடடு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றார். அந்த வகையில் ஓணம் பண்டிகையை தங்களது மகன்களுடன் இணைந்து கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.


இதனை அடுத்து நயன்தாரா அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார்.அப்போது தன்னுடைய மகன்களின் முகத்தை காட்டியபடி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாகியது.சமீபத்தில் ஜவான் படம் வெற்றி பெற வேண்டும் என்று  திருப்பதிக்கு சென்றார்கள், அங்கே எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இவர்கள் கட்டி வரும் புதிய வீடு குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கலைஞர், ரஜினிகாந்த், தனுஷ் என பல பிரபலங்கள் இருக்கும் போயஸ் கார்டனில் நடிகை நயன்தாராவும் அண்மையில் வீடு வாங்கியிருந்தார், இன்னும் அங்கே குடிபோகவில்லை.


4 மாடி கொண்ட அந்த வீட்டின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது, தற்போது அந்த வீட்டின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement