• Jul 23 2025

ஷாருக்கானின் மேனேஜரின் மாத சம்பளம் இவ்வளவா? வாயைப் பிளக்கும் நெட்டிசைன்கள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மேனேஜர் பூஜா தத்லானி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, அவரது பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

ஷாருக்கானின் மேனேஜர் பூஜா தத்லானி இந்தி பட உலகின் பிரபலர்  பிஆர் ஆவார். பூஜா தத்லானி சமீபத்தில் தனது புதிய இல்லத்தில் காலடி எடுத்து வைத்தார். இது வேறு யாருமல்ல முதலாளி பெண்மணியான, அதாவது  ஷாருக்கானின் மனைவி கௌரி கானால் வடிவமைக்கப்பட்டதாகும்.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் எழுதிய பூஜா தத்லானி, ''என் புதிய இல்லத்தில் அடியெடுத்து வைப்பது, அரவணைப்பு மற்றும் மகிழ்ச்சியை உருவாக்க புதிய கனவுகளுக்கு. இந்த புதிய பயணத்தை தொடங்குவதற்கு வேறு யாரும் இல்லாத கௌரிகான் என் குடும்பத்தை விட சிறந்த வழி என்ன.. அவள் என் வீட்டை ஒரு வீடாக மாற்றினாள்''. இங்கே பாருங்கள் என்று பதிவிட்டார்.

கடந்த வியாழக்கிழமை பூஜாவின் புதிய இல்லத்தில் மனைவி கௌரி கான் மற்றும் மகன் ஆர்யன் கானுடன் ஷாருக்கான் ஆகியோர் இருந்தனர்.  இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. 

பூஜா தத்லானி கடந்த 2012 முதல் ஷாருக்கின் மேனேஜர் ஆக தொழில்முறை வேலை ஒப்பந்தங்களை நிர்வகித்து வருகிறார்.

கே.கே.ஆர் மற்றும் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட நிர்வாகத்தை கவனித்தும் வருகிறார். MensXP.com என்ற நிறுவனத்தின் கூற்றுப்படி, பூஜா தத்லானியின் நிகர மதிப்பு ரூ. 45 முதல் 50 கோடி வரை இருக்கும். அவர் ஆண்டுக்கு ரூ.7 முதல் 9 கோடி வரை சம்பாதிப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

Advertisement

Advertisement