• Jul 24 2025

“பெஸ்டியுடன் முதல் ரீல்” குத்தாட்ட வீடியோவை பகிர்ந்த மீனா & சங்கவி - இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி,  தென்னிந்திய சினிமாவில் 90-களில் கதாநாயகியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில்  நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாகவும் , கதாநாயகியாகவும்  ரஜினி, கமல், அஜித், விஜய், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்  என முன்னணி நடிகர்களுடன்  இணைந்து மீனா நடித்திருக்கிறார்.

தற்போதும், தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த மீனா, கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக் இருப்பவர் .இந்நிலையில் நடிகை மீனா -நடிகை சங்கவி இருவரும் இணைந்து எனிமி படத்தில் தமன் இசையில் இடம்பெற்ற டும் டும் பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோவை நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும்,இதே வீடியோவை வெளியிட்ட நடிகை சங்கவி "என்னுடைய பெஸ்ட்டியுடன் முதல் ரீல்" என பதிவிட்டுள்ளார். 

இவர் , தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித் குமாரின் அமராவதி படத்தின் மூலம் சங்கவி பிரபலமானவர். பின்னர் நடிகர் விஜய்யின் ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நிலாவே வா ஆகிய படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement