• Jul 25 2025

எதிர் நீச்சல் சீரியலில் அடுத்த குணசேகரன் இவர் தானா?- ஒருவழியாக பிரபல நடிகரை ஓகே பண்ணிய சீரியல் டீம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் யார் என்ற கேள்விதான் அனைவரிடமும் இருந்து வருகின்றது. எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் காலமானார். 

இதையடுத்து அவருக்கு பதிலாக ஆதி குணசேகரன் ரோலில் யாரை நடிக்கவைக்கலாம் என தேடுதலில் சானலை சேர்ந்தவர்கள் இறங்கினார்கள்.பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.


 தற்போதைய சீரியல் குழு இறுதியாக ஒருவரை தேர்வு செய்துள்ளது.ஆமாம் அவர் வேறு யாருமில்லை வேல ராம மூர்த்தி அவர்கள் தான். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தற்போது இவரையே கமிட் செய்து சூட்டிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


முதலில் இவர் நடிக்க மாட்டார் என்று தெரிவித்திருந்தார் பின்னர் இவருடைய கோரிக்கைகளை டீம் ஏற்றுக் கொண்டதால் வேலராமமூர்த்தியே குணசேகரனாக நடிக்க கமிட்டாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement