• Jul 25 2025

பிக்பாஸ் சீசன் 7 இல் களமிறங்கிய முழுப் போட்டியாளர்களின் விபரம் இதோ- வெளியாகிய அதிகாரப்பூர்வ தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே, பிக்பாஸ் சீசன் 7 பணிகள் துவங்கிவிட்ட போதிலும் கமல்ஹாசன் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் துவங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. 


ஒருவழியாக, பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 1-ஆம் தேதி, துவங்க உள்ள நிலையில், அவ்வப்போது இதில் கலந்து கொள்ள உள்ள, போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகிவருகிறது.மேலும் இந்த நிகழ்ச்சியின்  ஆரம்ப விழா இன்றைய தினம் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது.


அதன் படி இதில் போட்டியாளர்களாக, பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவண விக்ரம், விக்ரம் பட மாயா கிருஷ்ணன், வனிதாவின் மகள் ஜோவிதா,நடனக்கலைஞர் மணி,மாடலிங் கேட்டகரியில் மலேசியாவைச் சேர்ந்த மூன் நிலா, பாலாஜி முருகதாஸின் நண்பர் அனன்யா ராவ்,கூல் சுரேஷ், பப்லு, யுகேந்திரன், ரவீனா தாஹா, லவ் ருடே அக்ஷயா, நடிகர் பிரதீப் ஆண்டனி ,பாரதி கண்ணம்மா சீரியல் வினுஜா தேவி,யூடியூபர் பூர்ணிமா ரவி ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.



Advertisement

Advertisement