• Jul 24 2025

படமா இது..? ஆதிபுருஷ் படத்தை பார்த்து நான் வெட்கப்படுகிறேன்.. விளாசி தள்ளிய ரீல் ராமர் ஆஷிஷ் ஷர்மா!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் ஆதிபுருஷ் , விமர்சன ரீதியாக இதுவரை எந்த படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு கடுமையான நெகட்டிவிட் விமர்சனம் குவிந்து வருகிறது. 

இந்நிலையில், சியா கே ராம் என்ற தொடரில் ராமராக நடித்த ஆஷிஷ் ஷர்மா, ஆதிபுருஷ் படம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ராமாயணக் கதையை வைத்து ஆதிபுருஷ் படம் உருவானதை நினைத்து மகிழ்ச்சியில் இருந்தேன். நமது வேதங்களை நம் சினிமா தெரிந்து கொள்ளப்போவதை நினைத்து உற்சாகமாக இருந்தேன்.

 ஆனால், ஆதிபுருஷ் படம் என்னை ஏமாற்றி விட்டது, ராமாயணக் கதையை படமாக எடுக்கும் போது பல ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும்.ஆனால், இந்த படத்தில் எந்த ஆராய்ச்சியும் இல்லை. இது ராமாயணத்தை உருவாக்கும் ஒரு சோம்பேறி முயற்சியாகவே நான் பார்க்கிறேன். இந்த படத்தை பார்க்கும் போது வாட்ஸ்அப் வரும் மெசேஜை ஃபார்வேர்டு செய்தது போல இருக்கிறது.

இயக்குநர் ஓம் ராவத் இந்துக்களின் உணர்வை பணத்திற்காக புண்படுத்திவிட்டார். ஆதிபுருஷ் படத்தின் தயாரிப்பாளர்கள் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். மேற்கத்திய மயமான இந்தியக் கதையை சொல்லாதீர்கள், இந்த படத்தைப் பார்த்து வெட்கப்படுகிறேன் என்று ஆஷிஷ் ஷர்மா அதிபுருஷ் படத்தை கடுமையாக விமர்சித்து தள்ளியிருக்கிறார்.

Advertisement

Advertisement