• Jul 23 2025

லியோ படத்தின் பெயரை டுவிட்டர் பக்கத்தில் இணைக்காமல் விட்டதற்கு இது தான் காரணமா?- உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.இதனால் இந்தப் படத்தின்  ப்ரமோஷன்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ளார். பார்த்திபன், லியோ என இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்களை படக்குழுவினர் மிகச்சிறப்பாக எடுத்து சென்று வருகின்றனர்.இந்தப் படம் LCUவில் இடம்பெறாது மாறாக லியோதாஸ் யூனிவர்சில் படம் அமையும் என்று தனது பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.


படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில், நாளைய தினம் மற்றொரு பாடல் வெளியாகவுள்ளதாகவும் அவர் அப்டேட் தெரிவித்துள்ளார். தனக்கு இந்தப்படத்தில் பிடித்தமான I am scared என்ற ஆங்கில பாடல் குறித்தும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதுதவிர்த்து பேமிலி பாடலாக மற்றொரு பாடலும் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளதை சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்நிலையில் தற்போதைய பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ள லோகேஷ், தன்னுடைய படங்களின் சென்சார் நிறைவடைந்த பின்பே அந்தப் படத்தின் பெயரை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இணைக்கும் வழக்கத்தை தான் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அதையொட்டியே தற்போது லியோ படத்தின் சென்சார் நிறைவடைந்ததையொட்டி படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இணைத்துள்ளதாகவும் அவர் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.


Advertisement

Advertisement