• Jul 23 2025

அடடே நம்ம ரம்யா கிருஷ்ணன் கூட இருக்காங்களா... ஆரம்பமாகிறது புத்தம் புதிய சீரியல் தொடர்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்றுமுதல் பிரபலமான சின்னத்திரை, பெரியதிரை நடிகைகளுடன் புத்தம் புதிய மெகா தொடர் ஆரம்பமாக உள்ளது.


ரசிகர்ளுக்கு விருப்பமான ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியும், ஹீரோவாக நந்தாவும்  நடிக்கும் " நளந்தமயந்தி"  தொடரில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணணும்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.


இத் தொடரில் நடிகை ரம்யா கிருஷ்ணன் சுமார் 6 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் அம்மனாக என்ட்ரி கொடுத்துள்ளார். இது குறித்த புரோமோ வீடியோ சமூக வலைதளத்தில் ஏற்கனவே வெளியாகி வைரலாகி வருகிறது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது. 


சாதாரண மெஸ் நடாத்தும்  பெண்ணாக வலம் வரும் நளதமயந்தியின் வாழ்வில் என்ன நடைபெற போகிறது என்பதை பார்க்க ஆவலுடன் இருக்கும் உங்களுக்காக 2023.10.09 அதாவது இன்றுமுதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது காணதவறாதீர்கள். 

Advertisement

Advertisement