• Jul 25 2025

ஈரமான ரோஜாவே சீரியலில் சந்தியா என்ட்ரி கொடுக்க இது தான் காரணமா?- முக்கிய பிரபலம் கொடுத்த அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய்  டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2.இந்த சீரியலில் தேவி பற்றிய உண்மைகள் அனைவருக்கும் தெரிய வந்ததோடு பார்த்திபன் ரம்யா திருமணமும் நின்று விட்டது. அதனால் பார்த்திபனுக்கும் காவியாவுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன.

அத்தோடு தொடர்ந்து பார்த்திபன் காவியா கழுத்தில் தாலி கட்டப்போன நேரத்தில் ராஜா ராணி சீரியல் போலீஸ் அதிகாரியான சந்தியா ரம்யாவை ஏமாற்றி விட்டு காவியா கழுத்தில் பார்த்திபன் தாலி கட்டப்போவதாக கம்லைன்ட் வந்துள்ளதாக கூறி பார்த்திபனை அரஸ்ட் செய்கின்றார். இதனால் அடுத்து இவர்களின் திருமணம் நடைபெறுமா இல்லையா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் இந்த சீரியலில் காவியாவின் அம்மாவாக நடித்து வரும் கிருபா பிரபல சேனலுக்க பேட்டியளித்துள்ளார். அதில் இந்த எப்பிஷோட்டில் சந்தியா என்ட்ரி ஏன் கொடுத்தார் என்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது காவியாவுக்கும் பார்த்திபனுக்கும் திருமணம் நடக்கப் போகுது என்று தெரியும். ஆனால் அது சும்மா சவ்வுன்னு முடியக்கூடாது என்பதற்காகத் தான் சந்தியாவைக் கொண்டு வந்தாங்க.


ஏற்னவே திருமணத்தை நிறுத்த தேவி, ரம்யா செய்த விஷயங்கள் எல்லாம் ஏற்கனவே தெரியும். அதனால தான் மீண்டும் உள்ளுக்குள்ளே இருந்தே பண்ணாமல் வெளில இருந்து கொண்டு வரலாம் என்று டைரக்டர் பண்ணினாரு. அதுவும் நல்ல சுவாரஸியமாகத் தான் போகுது. கண்டிப்பாக காவியா பார்த்திபன் திருமணம் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement