• Jul 25 2025

ரோகிணி திரையரங்கம் உடைக்கப்பட்டதற்கு இது தான் காரணமா?- லியோ ட்ரெய்லர் வெளியீட்டால் ஏற்பட்ட பரபரப்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முக்கியமான இயக்குநராக இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தற்பொழுது லியோ என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.இப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோவுக்கு யு/ஏ சர்ட்டிஃபிகேட் கிடைத்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படத்தில் வன்முறை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் இத்திரைப்படம் குறிப்பாக லியோ ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று கூறி வருகின்றனர்.மேலும் இதன் ட்ரெய்லர் நேற்றைய தினம்  மாலை 6.30 மணிக்கு ரிலீஸானதும் ரோகிணி தியேட்டரிலும் திரையிடப்பட்டது.


ட்ரெய்லர் வெளியானதும் தியேட்டருக்குள் இருந்த ரசிகர்கள் தங்களது உணர்ச்சி மிகுதியால் தியேட்டர் சீட்டுகள் அனைத்தையும் சீட்டுக்கட்டுக்களாய் சுருட்டி போட்டனர். ஒருகட்டத்தில் தியேட்டர் நிர்வாகத்தினரால் ரசிகர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை. கிட்டத்தட்ட நூறு சீட்டுக்கள்வரை அவர்கள் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

 ரசிகர்களின் இந்த செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.முக்கியமாக சிம்பு நடித்திருந்த பத்து தல படத்தின்போது டிக்கெட் எடுத்திருந்த நரிக்குறவ மக்களை ரோகிணி திரையரங்கம் உடையையும், நிறத்தையும் வைத்து உள்ளே விடவில்லை. இப்போது ரசிகர்கள் செய்திருக்கும் செயல் அந்த திரையரங்கையே யோசிக்க வைத்திருக்கும். 


முக்கியமாக இனி ஒரு திரைப்படத்துக்கு ஒருவர் வந்தால் அவரது உடையோ நிறமோ முக்கியம் இல்லை செயல்தான் முக்கியம் என்பதை உணர்ந்து ரோகிணி திரையரங்கம் செயல்படும் என சமூக வலைதளங்களில் பலர் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement