• Jul 24 2025

சூர்யா 42 படத்தின் கதை இதுதானா...இணையத்தில் கசிந்த தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாில் முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர் சூர்யா..இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக இணையும்  திரைப்படம் சூர்யா 42.

K.E. ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, மிருனாள் தாகூர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு  தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தின் தலைப்பு வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகுமெ ன்றும், டீசர் மே மாதம் வெளியாகிறது என்றும் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சூர்யா 42 கதை குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, '16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வரும் நபர் ஒருவர் சாக வரத்தை கொண்டு பல விதமான அடையாளங்களில் ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறார்.

16ஆம் நூற்றாண்டில் இருந்த வில்லன் மீண்டும் 2023ஆம் ஆண்டில் என்ட்ரி கொடுக்க ஹீரோவிற்கும், வில்லனுக்கும் இறுதியில் பயங்கரமான போரில் நடக்கும் சண்டை தான் சூர்யா 42 படத்தின் கதை என தகவல் வெளியாகியுள்ளது. 

அத்தோடு இந்த கதை கடந்த ஆண்டு மார்வல் படங்களில் ஒன்றாக வெளிவந்த Shang-Chi and the Legend of the Ten Rings படத்தின் காப்பி என கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement