• Jul 25 2025

மாஸ் சாதனை படைத்த சிம்பு பட 'மல்லிப் பூ' பாடல்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் 'வெந்து தணிந்தது காடு'. ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படத்தினுடைய வெற்றிக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பெரிதும் உதவியது. 


அதாவது படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் படத்தை வெற்றிப் பாதையை நோக்கி கொண்டு சென்று நிறுத்தியது. அதிலும் குறிப்பாக மல்லிப்பூ என்ற பாடல் வெளியானதுமே ரசிகர்கள் பலரையும் கவர ஆரம்பித்துவிட்டது. இந்தப் பாடலை மதுஸ்ரீ பாடியிருந்தார். அத்தோடு பாடலாசிரியர் தாமரை அந்தப் பாடலை எழுதியிருந்தார்.


இதனால் ரசிகர்கள் பலரும் அந்தப் பாடலை பாடியும், பாடலுக்கு நடனமாடியும் பலரும் ரீல்ஸாக வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது மல்லிப்பூ பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது யூட்யூபில் இதுவரை 100 மில்லியன் பார்வைகளை இப்பாடல் கடந்துள்ளது.


இந்த மகிழ்ச்சிகரமான தகவலை வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement