• Jul 26 2025

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் டாப் நாயகி இவர் தானா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையானவர் நடிகை மதுபாலா. 

மேலும் இவர், மம்முட்டியுடன் முதன்முதலில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில்  1991-ஆம் ஆண்டு அழகன் படத்தில் தமிழில் அறிமுகமானார். அதற்கடுத்து 1992-ஆம் ஆண்டு மணிரத்னத்தின் தேசிய விருது பெற்ற ரோஜா படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். 



அதன்பின்னர், 1993 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் படத்தில் நடித்து தமிழின் முன்னணி நடிகையானார். 



அதன்பிறகு ஏராளமான ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.இவர் 1999ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அமயா மற்றும் கெயா என இரு மகள்களும் உள்ளார்கள்.



இந்நிலையில் இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.அதாவது அவர் தனது சகோதரரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூற இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதோ பாருங்கள், 




Advertisement

Advertisement