• Jul 25 2025

லியோ படத்தில் விஜய்யின் கதாப்பாத்திரம் இது தானா?- லோகேஷ் சீக்ரெட்டாக வைத்திருந்த விஷயம் வெளி வந்திருச்சா- பதற்றத்தில் படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் நடிகர் விஜய்யின் லியோவும் ஒன்று. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின்  த்ரிஷா,மிஷ்கின், சாண்டி, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், பிக்பாஸ் ஜனனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.

 லியோ படத்தின் 60 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை அடுத்த மாதம் சென்னையில் நடத்த உள்ளனர். இன்னும் ஓரிரு மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்து படத்தை வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு உள்ளது. மறுபக்கம் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் படு ஜோராக நடைபெற்று வருகிறது.


லியோ படம் எல்.சி.யூவில் வருமா வராதா என்கிற கேள்வி ஒருபக்கம் இருக்க அதனை சஸ்பென்ஸாக வைத்துள்ள படக்குழு, மேலும் சிலவற்றை வெளியிடாமல் மிகவும் சீக்ரெட்டாக வைத்திருக்கிறதாம். அப்படி லோகேஷ் கனகராஜ் வைத்திருந்த ஒரு சீக்ரெட் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது. அதுவும் விக்ரம் படத்தில் அவர் சூர்யா கேரக்டரை எப்படி சீக்ரெட்டாக வைத்திருந்தாரோ அந்த அளவுக்கு ஒரு டாப் டக்கரான கேரக்டர் பற்றிய தகவல் தான்


அது என்னவென்றால், லியோ படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரம் சிங்கத்தின் குணாதிசயங்களைப் போல் ஒத்து இருக்குமாம். அதனை வெளிப்படுத்தும் விதமாக சிங்கம் தொடர்பான காட்சிகளும் படத்தில் முக்கிய பங்காற்றும் வகையில் தான் திரைக்கதை அமைத்துள்ளாராம் லோகி. அந்த சிங்கம் தொடர்பான காட்சிகளை CG மூலம் கொண்டு வருவதற்காக ரூ.15 கோடி வரை செலவழித்து இருக்கிறார்களாம். படத்தில் இது முக்கிய அங்கம் வகிக்கும் என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement