• Jul 25 2025

விஜய் டிவி பிரபலம் சுனிதா லெஸ்பியனா? வைரலாகும் முத்தக்காட்சி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்றே தனி ரசிகர் வட்டாரமே உண்டு. அதன்வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக்வித் கோமாளி  மூலம் மிகவும் பிரபல்யமானவர் தான் சுனிதா.

விஜய் டிவி மூலம், பிரபலமடைந்த சிலர் சினிமாவிலும் தற்போது கொடி கட்டி பறந்துவருகின்றனர். அதன்படி, ஜெகன், சந்தானம் தொடங்கி சிவகார்த்திகேயன், ரியோ வரை அனைவருமே விஜய் டிவி பிரபலங்கள் தான். 

இதே போல்  'ஜோடி பாய்ஸ் கேர்ள்ஸ்' போன்ற ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக வந்தவர் சுனிதா. வட மாநிலத்தை சேர்ந்த  இவர், நடனத்தின் மேல் உள்ள ஆர்வத்தால், அதை முறைப்படி கற்று, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஜோடி' நடன நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 முறை போட்டியாளராக பங்குபற்றினார். 


மேலும், தனுஷ் நடித்த '3' படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு ப்ரெண்ட் ஆக நடித்திருந்தார். அத்துடன், Cook With Comali  1,2,3 நிகழ்ச்சிகளில் கோமாளியாக கலந்து கொண்டுள்ளார்.

குறித்த நிகழ்ச்சியில் மூலம் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது. சுனிதா பேசும் கொஞ்சும் தமிழுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அதிகரித்தனர். 

இந்நிலையில் தற்போது ''FLAKKA'' என்ற படத்தில் சுனிதா லெஸ்பியனாக நடித்து தனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

குறித்த படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாக எல்லோரும் அதிர்ச்சியாகி 'சுனிதா லெஸ்பியனா' என செம ஷாக் ஆகிவிட்டனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement