• Jul 25 2025

லியோ திரைப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?- இந்த டுவிஸ்டை எதிர்பார்க்கலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்திருந்த 'லியோ' திரைப்படம் முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் சில முன்னணி நடிகர்களின் லைப் டைம் வசூலை பதம் பார்த்த நிலையில், தற்போது 'லியோ' படத்தின் மூன்றாவது நாளின் வசூல் விபரம் குறித்து வெளியாகியுள்ளது.

முதல் நாளில் அதிகாரப்பூர்வ வசூல் 148.5 கோடி என தயாரிப்பு நிறுவனம் மாநில வாரியாகவும் லியோ திரைப்படம் செய்த வசூல் சாதனையை தனியாக பட்டியலிட்டு வெளியிட்டது. முதல் நாளில் சாதனை படைத்த படத்தின் வசூல் இரண்டாம் நாளில் சற்று சரிவை சந்தித்து இரண்டாம் நாளில் ரூ.65 கோடியை வசூலித்தது.


 படத்திற்கு எழுந்து வரும் எதிர்மறையான விமர்சனமே இரண்டாம் நாள் சரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டது.  இதையடுத்து, நேற்று சனிக்கிழமை என்பதால் படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மூன்றாம் நாள் வசூல் ரூ. 21 கோடியும், கேரளா மற்றும் கர்நாடகாவில் ரூ.6 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானவில் ரூ 8 கோடியும்,நார்த் இந்தியாவில் ரூ 4.50 கோடியும், இந்திய அளவில் ரூ.45.50 கோடியை வசூலித்துள்ளது. 

உலக அளவில் லியோ திரைப்படம் மூன்று நாட்களில் ரூ 305 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.லியோ படத்திற்கு போட்டியாக எந்த படமும் வெளியாகவில்லை என்பதாலும், விஜய் என்கிற மெகா ஸ்டாரின் திரைப்படம் என்பதாலும், தொடர் ஆயுதபூஜை விடுமுறை என்பதாலும் படத்தின் வசூல் இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement

Advertisement